Posts

Showing posts from 2014

தாது வர்க்கம் - 3

Image
                       சித்த மருத்துவத்தின் கண்கள் மூன்று தாது வர்க்கம் – 1 முதல் தொகுதியில் நாம்சுத்தி முறைகள் பார்த்தோம் இனி குணம் நிகண்டு இவ்விரண்டு பற்றிப் பார்ப்போம். மருந்து பொருள்களை தாது — தாவர – சீவ என்று மூன்று வகையாக பிரிக்கலாம். இதில் முதலில் தாது வர்க்க மருந்து களை பற்றி பார்ப்போம். இதில் உலோகங்கள், காரசாரம், பாடனம், உபரசம் என வகைப் படுத்தி உள்ளனர். உலோகம் : -- இது இயற்கையில் உண்டான  உலோகங்கள் பூமியில்  இருந்து கிடைக்கும் உலோகம். அடுத்து  செயற்கையாக இரண்டு அல்லது மூன்று உலோகங்களை இணைத்து உண்டாக்கப் பட்டது இதில் சித்த மருத்துவம் பயன் படுத்தும் உலோகங்கள் அவர்கள் காலத்தில் தெரிந்த அல்லது உபயோகத்தில் இருந்த உலோகங்கள் மட்டுமே பயன் பட்டன அவை பதினொன்று ஆகும். தங்கம் – வெள்ளி – செம்பு – நாகம் - உருக்கு – வெண்கலம் – தரா -கருவங்கம் – வெள்வங்கம் – இரும்பு – பித்தளை – என 11  மட்டுமே பயன் படுகிறது. இதில் வெண்கலம், பித்தளை, தரா எனப்படும் மூன்றும் இரண்டு மூன்று உலோகங்களை இணைத்து உண்டாக்கப்படும் உலோகமாகும். மற்றவை இயற்கை உலோகங்கள் ஆகும். தங்கம்